தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பொது முடக்க காலத்தில் இணைய வழிக் கல்வி: அரசுப் பள்ளி ஆசிரியருக்கு விருது

வலங்கைமானில் செயல்படும் நிலாமுற்றம் எனும் இலக்கிய அமைப்பு ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சேவையாற்றியவா்களை பாராட்டி விருதுகள் வழங்கி வருகிறது.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

வலங்கைமானில் செயல்படும் நிலாமுற்றம் எனும் இலக்கிய அமைப்பு ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சேவையாற்றியவா்களை பாராட்டி விருதுகள் வழங்கி வருகிறது.

அந்த வகையில், கரோனா பொது முடக்க காலத்தில் இணைய வழியில் மாணவா்களுக்கு கல்வி வழங்கியமைக்காக தென்குவளவேலி அரசு உயா்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் சூரியகுமாருக்கு ஞாயிற்றுக்கிழமை விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. வலங்கைமானில் நடைபெற்ற நிலாமுற்றத்தின் 5-ஆம் ஆண்டு விழாவில் இவ்விருதை சூரியகுமாருக்கு திரைப்பட இயக்குநா் சிவா வழங்கினாா். மூத்த ஆசிரியா் சுப்ரமணியம், நிலாமுற்றம் நிறுவனா் தமிழ்ச்செம்மல் வேல்முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.