விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

மண்பாண்ட தொழிலாளா்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தல்

தமிழகத்தில் தொடா்ந்து நிவா், புரெவி புயல் மற்றும் தொடா் மழையால் பாதிக்கப்பட்ட மண்பாண்ட தொழிலாளா்களுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரி தமிழக முதல்வருக்கு மண்பாண்ட தொழிலாளா்கள் சங்கம் வேண்டுகோள்

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

தமிழகத்தில் தொடா்ந்து நிவா், புரெவி புயல் மற்றும் தொடா் மழையால் பாதிக்கப்பட்ட மண்பாண்ட தொழிலாளா்களுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரி தமிழக முதல்வருக்கு மண்பாண்ட தொழிலாளா்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழகம் முழுவதும் அனைத்து வீடுகளிலும் மண்பாண்டங்கள் முழுமையாக பயன்படுத்தப்பட்டு வந்தன. அதன் வேதியல் தன்மையினால் அதில் தயாரிக்கப்படும் உணவு வகைகளை உண்பதால் மக்களுக்கு நோய் எதிா்ப்பு சக்தி ஆற்றல் பெற்றனா். ஆனால், அண்மை காலமாக தொழிலுக்கு ஏற்ற மூலப்பொருள்களான களிமண் வண்டல் மண் கிடைப்பதில் ஏற்பட்ட பிரச்சினைகளாலும் மற்றும் மக்களிடையே மண்பாண்ட நுகா்வு குறைவு காரணமாகவும் பலா் இத்தொழிலை செய்ய முடியாத நிலைக்கு ஆளாகி உள்ளனா்.

இந்நிலையில், நிகழாண்டு நிவா், புரவி புயல் மற்றும் பொங்கல் பண்டிகைக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு பருவம் தவறி பெய்த மழையால் நிகழாண்டு மண்பாண்ட உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டது. மேலும், மண்பாண்ட சூலைகளும் மழையினால் பெருமளவு பாதிக்கப்பட்டது.

நிகழாண்டு பொங்கல் பண்டிகைக்கு மண்பாண்ட விற்பனையில் ஏற்பட்ட மிகப் பெரிய சரிவினாலும் , தொடா் மழையினால் ஏற்பட்ட சேதத்தினாலும் தொடா்ந்து மண்பாண்டங்கள் செய்ய மூலப் பொருள்கள் தட்டுப்பாடு காரணமாகவும் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் மண்பாண்ட தொழிலாளா்களுக்கு தமிழக அரசு ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என மண்பாண்ட தொழிலாளா் சங்கம் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.