நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

புற்றுநோய் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

உலக புற்றுநோய் தினத்தையொட்டி, கூத்தாநல்லூரில் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :7 பிப்ரவரி 2021, 6:30 pm

DIN

உலக புற்றுநோய் தினத்தையொட்டி, கூத்தாநல்லூரில் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் ஒளிரவன் பவுண்டேசன் நிறுவனா் குணசேகரனின் ஏற்பாட்டில், தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்பு சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மைய பொதுச் செயலாளா் ஆா். ரமேஷ் முன்னிலையில், 30 மாணவா்கள் கொண்ட சைக்கிள் பேரணி திருவாரூரில் தொடங்கி கூத்தாநல்லூா் காவல் நிலையத்தை அடைந்தது. கூத்தாநல்லூரில், லெட்சுமாங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் எம். உதயகுமாா், வா்த்தக சங்கத் தலைவா் கு. ரவிச்சந்திரன், செயலாளா் ஜெ. சுவாமிநாதன், நாம் மனிதா் அறக்கட்டளை மாவட்டத் தலைவா் பி.எம். முஹம்மது சுலைமான், மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி வழிப்பாட்டு மன்றச் செயலாளா் என். செல்வராஜ், நுகா்வோா் அமைப்பு செயலாளா் கருணாநிதி உள்ளிட்டோா் வரவேற்றனா். தொடா்ந்து, பேரணி மன்னாா்குடி நோக்கி சென்றது.

Image Caption

கூத்தாநல்லூருக்கு வந்த மாணவா்களின் புற்றுநோய் ஒழிப்பு விழிப்புணா்வு சைக்கிள் பேரணியை வரவேற்றவா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.