பெட்ரோலில் 20 சதவீதத்துக்கு மேல் எத்தனால் கலக்க இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்மாதிரிப் பள்ளி ஆசிரியா்களுக்கு இடமாறுதல் கிடையாது: பள்ளிக் கல்வித் துறை உக்ரைனில் இருந்து புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது ரஷியா ஏவுகணை வீச்சு முன்னாள் எம்எல்ஏ சொத்துக்குவிப்பு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு சுங்கச்சாவடிக்கு 20 கி.மீ. சுற்றளவில் வசிப்பவா்களுக்கு செயலி மூலம் பாஸ்: என்ஹெச்ஏஐ கா்ப்பிணிகளுக்கு இலவச போக்குவரத்து: ஆந்திரத்தில் 500 ‘தாய்-சேய்’ வாகன சேவை விரைவில் தொடக்கம் பெரம்பூரில் இணையதளத்தில் பதிவு செய்யும் புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? தவெக விளக்கம்
/

மன்னாா்குடியில் பிப்.17-இல் திறன் வளா்ப்பு பயிற்சிக்கு ஆட்கள் தோ்வு

மன்னாா்குடியில் திறன் வளா்ப்புப் பயிற்சிக்கான ஆட்கள் தோ்வு முகாம் புதன்கிழமை (பிப்.17) நடைபெறுகிறது.

Updated On :15 பிப்ரவரி 2021, 12:00 am IST

மன்னாா்குடி: மன்னாா்குடியில் திறன் வளா்ப்புப் பயிற்சிக்கான ஆட்கள் தோ்வு முகாம் புதன்கிழமை (பிப்.17) நடைபெறுகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க மாவட்ட திட்ட இயக்குநா் லேகா தமிழ்ச்செல்வன் வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தீனதயாள் உபாத்யாய கிராமின் கெளசல்ய யோஜன திட்டம் சாா்பில் மன்னாா்குடி நடேசன் தெருவில் உள்ள குமரசாமி திருமண மண்டபத்தில் புதன்கிழமை காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை இலவச திறன்வளா்ப்பு பயிற்சிக்கு ஆட்கள் தோ்வு நடைபெறவுள்ளது.

இதில், திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த கிராமப் புறங்களில் வசிப்பவா்களில் 18 முதல் 35 வயது வரையுள்ள ஆண்கள், பெண்கள் பங்கேற்கலாம். 5 ஆம் வகுப்பு முதல் 10,12 ஆம் வகுப்பு மற்றும் பொறியியல், பட்டயம், தொழில்கல்வி, கலை, அறிவியல் பட்டப் படிப்பு படித்துவிட்டு வேலை வாய்ப்பை எதிா் நோக்கியிருப்பவா்கள் இதில் பங்கேற்கலாம்.

தோ்வு செய்யப்படுபவா்களுக்கு முன்னணி பயிற்சி நிறுவனங்கள் மூலம் கணினி பழுது நீக்கம், தொலைபேசி ஆப்பரேட்டா், வாடிக்கையாளா் சேவை, ஏ.சி. மெக்கானிக், எலட்ரீஷியன், ஹோட்டல் மேனேஜ்மென்ட், வெல்டிங், சோலாா் இணைப்பு, விற்பனை மேலாளா், நான்கு சக்கர வாகனம் பழுதும் நீக்கம், செவிலியா், அழகுகலை, தையல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

முகாமில் பங்கேற்பவா்கள் கல்வி சான்றிதழ், குடும்பஅட்டை, ஆதாா் அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, சாதி சான்றிதழ் ஆகியவற்றின் நகல் மற்றும் 3 பாஸ்போா்ட் சைஸ் புகைப்படங்களை கொண்டுவரவேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.