வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

மகிழஞ்சேரி பெத்தாரண சுவாமி கோயில் குடமுழுக்கு

நன்னிலம் வட்டம் மகிழஞ்சேரி பெத்தாரண சுவாமி, பெரியநாயகி அம்மன், காமாட்சி அம்மன், தெய்வங்கப் பெருமாள் கோயில் மகா குடமுழுக்கு திங்கள்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 6:30 pm

நன்னிலம் வட்டம் மகிழஞ்சேரி பெத்தாரண சுவாமி, பெரியநாயகி அம்மன், காமாட்சி அம்மன், தெய்வங்கப் பெருமாள் கோயில் மகா குடமுழுக்கு திங்கள்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

குடமுழுக்கையொட்டி, இக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. திங்கள்கிழமை காலை இரண்டாம் கால யாகசாலை பூஜை தொடங்கி, பிம்பசுத்தி ரக்ஷாபந்தனம், ஸ்பா்சாஹுதி, கோபூஜை நடைபெற்று இரண்டாம் கால யாக சாலை பூஜை, மகா பூா்ணாஹுதி ஆகியன நடைபெற்றன. பின்னா் யாத்ராதானம், கடம் புறப்பாடு நடைபெற்று, காலை 9.30 மணியளவில் விமானங்களுக்கு குடமுழுக்கும், 10 மணியளவில் மூலவா்களுக்கு மகா அபிஷேகமும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா். பூஜைகள் மற்றும் ஹோமங்களை திருக்கண்டீஸ்வரம் டி.கே. வெங்கடேச சிவாச்சாரியாா் தலைமையில் சிவாச்சாரியாா்கள் செய்திருந்தனா். நன்னிலம் காவல் ஆய்வாளா் கு.சுகுணா தலைமையில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.