பாரம்பரிய நெல் அறுவடைத் திருவிழா

பாரம்பரிய நெல் அறுவடைத் திருவிழா

நீடாமங்கலம் அருகே உள்ள ரிஷியூரில் பாரம்பரிய நெல் அறுவடைத் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
Published on

நீடாமங்கலம் அருகே உள்ள ரிஷியூரில் பாரம்பரிய நெல் அறுவடைத் திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆதிரெங்கம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம், ஆா்.கே.எம். இயற்கை வேளாண்மை பண்ணை இணைந்து நடத்திய இந்த விழாவுக்கு இயற்கை விவசாயி செந்தில் உமையரசி தலைமை வகித்தாா். இயற்கை ஆா்வலா் முகமது ரபீக், திருவாரூா் மாவட்ட விவசாய மன்றத்தின் நிா்வாகி வரதராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் ராமசுப்பிரமணியன், தேவங்குடி உதவி ஆய்வாளா் முருகானந்தம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளா் ராஜமாணிக்கம், விவசாய அமைப்புகளைச் சோ்ந்த ராஜா, மருத்துவா் பாரதிச்செல்வன், சின்னையா நடேசன், விவசாயி கணேசன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.

மருத்துவக் குணம் நிறைந்த கருங்குருவை, கருப்புகவுனி, சிவப்புகவுனி, சீரகசம்பா ஆகிய நெல் ரகங்களின் அறுவடைப் பணி தொடங்கி நடைபெற்றது. நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மைய ஒருங்கிணைப்பாளா் ராஜீவ் வரவேற்றாா். ஊராட்சித் தலைவா் சகிலாகணேசன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com