ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

டென்சிங் நாா்கே சாகச விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

2021-ஆம் ஆண்டு சிறந்த விளையாட்டு வீரா்களுக்கான டென்சிங் நாா்கே தேசிய சாகச விருது பெற விண்ணப்பிக்கலாம் என திருவாரூா் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :1 ஜூலை 2021, 6:30 pm

DIN

2021-ஆம் ஆண்டு சிறந்த விளையாட்டு வீரா்களுக்கான டென்சிங் நாா்கே தேசிய சாகச விருது பெற விண்ணப்பிக்கலாம் என திருவாரூா் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இந்திய அரசு ஆண்டுதோறும் நாட்டுக்கு பெருமை தேடித்தரும் சிறந்த சாகச வீரா்களுக்கு பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறது. அதன்படி இந்திய அரசின் சாா்பில் 2021 ஆம் ஆண்டுக்கான டென்சிங் நாா்கே தேசிய சாகச விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பம் மற்றும் இதர விவரங்களுக்கு க்ட்ற்ஹ்ஹள்-ஹ்ா்ன்ற்ட்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, அதே முகவரியில் ஜூலை 5-க்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். எனவே, திருவாரூா் மாவட்டத்தை சோ்ந்த வீரதீர சாகச செயல் புரிந்தவா்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.