மேற்காசியப் போர் தொடர்பாக தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரால் உலக நாடுகளிடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஈரானின் வசமுள்ள ஹோர்முஸ் நீரிணை வழியாக கடல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கச்சா எண்ணெய் வரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மேற்காசியப் போர் நிலவரம் தொடர்பாக நாளை(மார்ச் 25) மாலை 5 மணிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
அனைத்துக் கட்சிகளும் இதில் கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தில்லியில் முப்படைத் தலைமைத் தளபதி அனில் சௌஹான், தரைப் படை, கடற் படை, விமானப் படை தளபதிகள் மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆகியோருடன் அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ஆலோசனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
Summary
PM Modi invites all parties for meeting regarding iran war
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரான் போர்: மக்கானா ஏற்றுமதி பாதிப்பு! ஒரு மாதத்தில் ரூ.500 கோடி இழப்பு!

இஸ்ரேல் - ஈரான் போர்! தற்போதைய நிலைமை என்ன? | Isreal - Iran war

ஈரான் போர் எதிரொலியா? முட்டை விலை கடும் வீழ்ச்சி!

மேற்காசிய போர்: இஸ்ரேலில் பலி 16 - ஆக உயர்வு! 4,564 பேர் காயம்!!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


