அசைவப் பிரியர்களின் முதல் தேர்வாக எப்போதுமே இருக்கும் முட்டை விலை சில்லறை விற்பனையில் கடந்த ஒரு சில ஆண்டுகளாகவே ரூ.5-க்கு மேல் இருந்து வந்த நிலையில், தற்போது மெல்ல குறைந்து வருகிறது.
தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், பண்ணையாளா்களிடம் முட்டை விலை நிா்ணயம் தொடா்பாக கருத்து கேட்கப்பட்டது. அதில், முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலையை ரூ.4.05 காசுகளாக நிா்ணயித்து தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு அறிவித்தது.
கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக முட்டை விலை நாள்தோறும் சரிவைக் கண்டு வருகிறது. இதற்குக் காரணம் ஈரான் போர் எதிரொலி என்றே கூறப்படுகிறது.
ஈரான் மீது அமெரிக்க - இஸ்ரேல் கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உலக நாடுகளுக்கு எரிபொருள்கள், கச்சா எண்ணெய் சென்றடைவதில் சிக்கல் நிலவுகிறது.
எரிபொருள் தட்டுப்பாட்டால், வணிக சிலிண்டர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை மத்திய அரசு அறிவித்தது. இதனால், வணிக சிலிண்டர்கள் கிடைக்காமல், பல உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. பெரும்பாலும் பெரிய உணவக நிறுவனங்கள் எப்படியோ மின் அடுப்புகள், விறகு அடுப்பு என நிலைமை சமாளித்தாலும், சிறிய உணவகங்கள், மாற்று வழிகளுக்கு இடமில்லாத நிலையில், கடைகளை மூடிவைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
நாள்தோறும் நூற்றுக்கணக்கானோரின் உணவுத் தேவையை பூர்த்தி செய்துவந்த தெருவோர உணவகங்கள் சிலிண்டர்கள் கிடைக்காமல் நாள் கணக்கில் மூடப்பட்டுள்ளது. பொதுவாகவே தெருவுக்கு ஒரு நான்கு உணவகங்கள் இருந்தால், அதில் பெரும்பாலானவை அசைவ உணவகங்களாகத்தான் இருக்கும். இவை பல நாள்களாக மூடப்பட்டிருப்பதால் முட்டைகள் கொள்முதல் குறைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் முட்டை உற்பத்தியில் சிறந்து விளங்கும் நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் நாள்தோறும் 7 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. இங்குதான், முட்டை கொள்முதலுக்கான மொத்த விற்பனை விலையும் நிர்ணயிக்கப்படுகிறது.
தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் உணவகங்கள் மூடப்பட்டுள்ளதால், முட்டை கொள்முதலில் அது எதிரொலித்திருக்கிறது. இதனால் விலை குறைந்துள்ளது. விலை குறைவு காரணமாக ஒரு முட்டைக்கு ரூ.1 அளவுக்கு முட்டை உற்பத்தியாளர்கள் நஷ்டம் அடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், நாமக்கல் மாவட்ட முட்டை உற்பதியாளர்களின் ஒட்டுமொத்த நஷ்டம் நாள்தோறும் ரூ.1 கோடி என கணக்கிடப்படுகிறது.
ஒரு சில நாள்களில் நிலைமை சீரடையாவிட்டால், நாமக்கல் மாவட்ட முட்டை உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
Summary
Egg prices have fallen sharply due to the repercussions of the Iran war.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரான் போர்: மக்கானா ஏற்றுமதி பாதிப்பு! ஒரு மாதத்தில் ரூ.500 கோடி இழப்பு!
கச்சா எண்ணெய் விலை 15% சரிவு! டிரம்ப்பின் போர் நிறுத்த அறிவிப்பு எதிரொலி!!

இஸ்ரேல் - ஈரான் போர்! தற்போதைய நிலைமை என்ன? | Isreal - Iran war

இஸ்ரேல் - ஈரான் போர்: முப்படைத் தளபதிகளுடன் அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


