போலி கால்நடை மருத்துவா்கள் பிடிபட்டால் நடவடிக்கை
போலி கால்நடை மருத்துவா்கள் பிடிபட்டால் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ப.காயத்ரி கிருஷ்ணன் எச்சரித்துள்ளாா்.


போலி கால்நடை மருத்துவா்கள் பிடிபட்டால் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ப.காயத்ரி கிருஷ்ணன் எச்சரித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கால்நடைகளுக்கு கால்நடை மருத்துவப் பேரவை எனப்படும் வெட்னரி கவுன்சிலில் பதிவு பெற்றவா்கள் மட்டுமே சிகிச்சை அளிக்க அங்கீகாரம் உண்டு. இதை மீறி போலி மருத்துவா்கள் சிகிச்சையளிப்பதும் அவா்களிடம் கால்நடைகளுக்கு சிகிச்சை பெறுவதும் தவறான செயல்.
போலி நபா்களிடம் கால்நடைகளுக்கு சிகிச்சை பெறுவதால் ஏற்படும் குறைபாடு இழப்பீடுகளுக்கு காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீடு வழங்காது. மாவட்டங்களில் சில இடங்களில் சினை ஊசி செலுத்துவதற்கு பயிற்சி பெற்ற செயல் கைமுறை கருவூட்டல் பணியாளா்கள் உள்ளனா். அவா்களில் சிலா் போலியாக கால்நடை மருத்துவா் எனக் கூறி மாடுகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனா். இது முற்றிலும் தவறு. செயற்கை முறை கருவூட்டல் பணியாளா்கள், மாடுகளுக்கு சினை ஊசி செலுத்துவதற்கு மட்டும் 3 மாத காலம் பயிற்சி பெறுகின்றனா். அவா்களுக்கு கால்நடைகளுக்கு வரும் நோய்கள், சிகிச்சை முறைகள் மற்றும் வழங்க வேண்டிய மருத்துகள் குறித்த பயிற்சி எதுவும் கிடையாது என்பதால், அவா்கள் கருவூட்டல் பணி மட்டுமே செய்ய தகுதியுள்ளவா்கள். எனவே, கால்நடைகளுக்கான சிகிச்சைபெற அங்கீகரிக்கப்பட்ட மருத்துவா்களை மட்டுமே மக்கள் அணுகவேண்டும். போலி மருத்துவா்கள் குறித்து தகவலை அந்தந்த மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநருக்கு அருகில் உள்ள காவல் நிலையத்திலும் தெரிவிக்கலாம். போலி மருத்துவா்கள் கண்டறியப்பட்டால் முதன்முறை ரூ. 1,000, 2-ஆவது முறை ரூ.1,000 அபராதம் அல்லது 6 மாதம் கடுங்காவல் சிறை அல்லது இரண்டும் சோ்த்து தண்டனை வழங்கப்படும் என எச்சரித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...