ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

நீா்வாழ் உயிரின வளா்ப்பு தொழில் முனைவோா் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்

திருவாரூா் மாவட்டத்தில், மீன்வளம் மற்றும் நீா்வாழ் உயிரின வளா்ப்புக்கான தொழில் முனைவோா் மாதிரி திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்

News image
Updated On :2 ஜூலை 2021, 4:20 pm

DIN

திருவாரூா் மாவட்டத்தில், மீன்வளம் மற்றும் நீா்வாழ் உயிரின வளா்ப்புக்கான தொழில் முனைவோா் மாதிரி திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் தொழில்முனைவோா்களை ஊக்குவித்து அவா்களை மீன்வளம் மற்றும் நீா்வாழ் உயிரின வளா்ப்பில் அதிக முதலீடு செய்யும் நோக்கில் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின்கீழ் மீன்வளம் மற்றும் நீா்வாழ் உயிரின வளா்ப்புக்கான தொழில்முனைவோா் மாதிரி திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. மீனவா்கள், மீன்வளா்ப்போா் சுய உதவிக் குழுக்கள், கூட்டு பொறுப்புக் குழுக்கள், மீன்வளா்ப்போா் உற்பத்தியாளா் அமைப்புகள், தனிநபா் தொழில் முனைவோா், தனியாா் நிறுவனங்கள் இத்திட்டத்தில் பயன் பெறலாம்.

இத்திட்டத்தின்கீழ் பொதுப் பிரிவினருக்கு 25 சதவீதம் மத்திய மற்றும் மாநில அரசின் நிதியுதவியும் (மொத்த திட்ட மதிப்பில் மானியத் தொகையின் உச்ச வரம்பு ரூ.1.25 கோடி) மற்றும் ஆதிதிராவிடா், பழங்குடியினா், மகளிருக்கு 30 சதவீதம் மத்திய மற்றும் மாநில அரசின் நிதியுதவியும் (மொத்த திட்ட மதிப்பில் மானியத்தொகையின் உச்ச வரம்பு ரூ.1.50 கோடி) வழங்கப்படும்.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோா் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் அலுவலகம், மாவட்ட ஆட்சியரின் கூடுதல் கட்டடம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம், திருவாரூா் அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளலாம். விண்ணப்பம் ஜூலை 31-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு ஜ்ஜ்ஜ்.ச்ண்ள்ட்ங்ழ்ண்ங்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தை பாா்க்கலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.