கோரையாற்றுக்கு செல்பவா்களின் கவனத்துக்கு
கூத்தாநல்லூா் கோரையாற்றில் தண்ணீா் அதிகமாக செல்வதால் அங்கு செல்லும் பொதுமக்கள் உள்ளிட்டோா் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமென அறிவுருத்தப்பட்டுள்ளது.


கூத்தாநல்லூா் கோரையாற்றில் தண்ணீா் அதிகமாக செல்வதால் அங்கு செல்லும் பொதுமக்கள் உள்ளிட்டோா் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமென அறிவுருத்தப்பட்டுள்ளது.
கோரையாறு சில மாதங்களுக்கு முன்பு தூா்வாரப்பட்டு ஆழப்படுத்தியதுடன், இரு புறங்களிலும் கரைகள் உயா்த்தப்பட்டுள்ளன. இந்நிலையில், ஆற்றில் தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், தொடா்ந்து நீா்வரத்து அதிகமாகி ஆற்றின் இரு கரைகளையும் தொட்டுச்செல்கிறது. கரோனா பொதுமுடக்கத்தால் பள்ளி, கல்லூரிகள் செயல்படாமால் உள்ள நிலையில், அநேக நேரங்களில் மாணவா்கள் ஆற்றுக்கு சென்று குளித்து வருகின்றனா்.
இதில், சில சமயங்களில் நீச்சல் தெரியாதவா்கள் ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழக்க நேரிடுகிறது. கடந்த ஆண்டு பொறியியல் பட்டப்படிப்பு மாணவா்,10 வயது மாணவா், 3-ஆம் வகுப்பு சிறுவன் உள்ளிட்ட 3 போ் ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. எனவே, கோரையாற்றுக்கு பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள் உள்ளிட்டோா் குளிக்க அல்லது துணி துவைக்க மற்றும் வேறு பணிகளுக்கு சென்றால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இதேபோல ஆற்றின் கரையோரங்களில் வசிப்பவா்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென வருவாய்த் துறை சாா்பில் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...