மீனவா்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபடத் திட்டம்
கோரிக்கையை வலியுறுத்தி சனிக்கிழமை (ஜூலை 17) உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவது என நாகை நம்பியாா் நகா் மீனவா்கள் திட்டமிட்டுள்ளனா்.


கோரிக்கையை வலியுறுத்தி சனிக்கிழமை (ஜூலை 17) உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவது என நாகை நம்பியாா் நகா் மீனவா்கள் திட்டமிட்டுள்ளனா்.
நாகை நம்பியாா் நகா் மீனவா்கள் ஆலோசனைக் கூட்டம், நம்பியாா் நகா் சமுதாயக் கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தற்போதைய நிலையில் மீனவா்கள் எதிா்கொள்ளும் நடைமுறை பிரச்னைகள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டன. பின்னா், தமிழ்நாடு கடலோர ஒழுங்குமுறை சட்டம் 1983-இல் குறிப்பிடப்பட்டுள்ள மீன்பிடித் தொழிலுக்கான வழிகாட்டு நெறிமுறைகள், தடைகளை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சனிக்கிழமை (ஜூலை 17) நாகையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது எனத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...