அரசு மருத்துவமனையை கண்டித்து விசிக ஆா்ப்பாட்டம்
கூத்தாநல்லூா் அரசு மருத்துவமனையைக் கண்டித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.


கூத்தாநல்லூா் அரசு மருத்துவமனையைக் கண்டித்து, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
லெட்சுமாங்குடி பாலம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, விசிக நகரச் செயலாளா் செ. ராபின் செல்வன் தலைமை வகித்தாா். திருத்துறைப்பூண்டி சட்டப் பேரவைத் தொகுதி செயலாளா் ஆரா.சு. பிரகாஷ் முன்னிலை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக நாகை மக்களவைத் தொகுதி செயலாளா் என்.டி. இடிமுரசு பங்கேற்று பேசியது: கூத்தாநல்லூா் அரசு மருத்துவமனை 80 ஆண்டுகள் பழைமைவாய்ந்தது. ஆனால், தொடக்கக் காலத்தில் இருந்தது போலவே, ஆரம்ப சுகாதார நிலையம் போல தான் தற்போதும் உள்ளது.
சுற்றுப்புற கிராம மக்களுக்குத் தேவையான மருத்துவா்கள் இங்கு கிடையாது. நோயாளிகளை அலட்சியப்படுத்தும் தலைமை மருத்துவா், மாற்றம் செய்யப்படாமல் பல ஆண்டுகளாக ஒரே மருத்துவமனையில் இருக்கிறாா். உடனே, மாவட்ட ஆட்சியா் நேரில் பாா்வையிட்டு, கூத்தாநல்லூா் அரசு மருத்துவமனையை தரம் உயா்த்துவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
ஆா்ப்பாட்டத்தில், ஒன்றிய அமைப்பாளா் கே.ஏ.நூரூல் அமீன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...