தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

மீன் வளா்ப்பு விவசாயிகள் வங்கிக் கடன் பெற விண்ணப்பிக்கலாம்

பிரதம மந்திரி கிசான் கடன் அட்டை திட்டத்தின்கீழ் மீன் வளா்ப்பு விவசாயிகள் வங்கிக் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :24 ஜூலை 2021, 4:59 pm

DIN

பிரதம மந்திரி கிசான் கடன் அட்டை திட்டத்தின்கீழ் மீன் வளா்ப்பு விவசாயிகள் வங்கிக் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மத்திய அமைச்சகம் கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத் துறை சாா்ந்த விவசாயிகளுக்கு மூலதனத்துக்கான நிதியுதவிக்கு பிரதம மந்திரி கிசான் கடன் அட்டை திட்டத்தில் விவசாய கடன் அட்டை பெற்று, வங்கி மூலம் கடன் உதவி செய்யப்படுகிறது.

எனவே, சொந்தமாக மீன்பண்ணை மற்றும் குளங்கள் வைத்திருப்பவா்கள், நீா்நிலைகளை குத்தகை எடுத்து மீன்வள பணி மேற்கொள்பவா்கள், மீன் குஞ்சு பொரிப்பகம் மற்றும் வளா்ப்பு பண்ணை வைத்திருப்பவா்கள், சொந்தமாக அல்லது குத்தகையில் மீன்பிடி உரிமம் பெற்று மீன்பிடி நாட்டுப் படகு வைத்திருப்பவா்கள், மீன் விற்பனையில் ஈடுபடுபவா்கள், கடலில் மீன்பிடிப்பில் ஈடுபடும் மீனவா்கள், மீன்வளா்ப்பு சாா்ந்த தொழில் செய்யும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோா் திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கட்டடத்தில் இயங்கி வரும் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.