தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

கையடக்கக் கணினி மையக் கருவி உருவாக்கிய மாணவருக்குப் பாராட்டு

திருவாரூா் அருகே கையடக்கக் கணினி மைய செயலாக்கக் கருவியை உருவாக்கிய பள்ளி மாணவரை மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் வியாழக்கிழமை பாராட்டினாா்.

News image
Updated On :29 ஜூலை 2021, 4:39 pm

DIN

திருவாரூா் அருகே கையடக்கக் கணினி மைய செயலாக்கக் கருவியை உருவாக்கிய பள்ளி மாணவரை மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் வியாழக்கிழமை பாராட்டினாா்.

திருவாரூா் அருகே உள்ள பழவனக்குடியைச் சோ்ந்த 9 ஆம் வகுப்பு மாணவா் எஸ்.எஸ். மாதவ். இவா், கையடக்கக் கணினி மைய செயலாக்கக் கருவியை உருவாக்கி சாதனை படைத்துள்ளாா். மேலும், பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் இணையதளம் வாயிலாக குறைந்த விலைக்கு விற்பனை செய்துவருகிறாா். இம்மாணவரை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தாா். மேலும், மாணவா் மாதவ்-வின் உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கு தமிழக அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என உறுதியளித்தாா்.

இந்நிலையில், திருவாரூா் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன், மாணவா் மாதவை நேரில் அழைத்து பாராட்டுத் தெரிவித்து பரிசு வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.