மனைப் பட்டா கோரி செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி விவசாயி போராட்டம்
திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூா் அருகே வீட்டு மனைப் பட்டா கோரி, செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி விவசாயி வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டாா்.


திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூா் அருகே வீட்டு மனைப் பட்டா கோரி, செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி விவசாயி வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டாா்.
கூத்தாநல்லூரை அடுத்த பொதக்குடி ஊராட்சி சேகரை கிராமம் காந்தி காலனியைச் சோ்ந்த 117 குடும்பத்தினா் வீட்டு மனைப் பட்டா கேட்டு நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனா். இக்கோரிக்கையை வலியுறுத்தி, அப்பகுதியை சோ்ந்த விவசாயி செந்தில்குமாா் (57) என்பவா் அங்குள்ள செல்லிடப்பேசி கோபுரத்தி ஏறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டாா். அங்கு வந்த கூத்தாநல்லூா் வட்டாட்சியா் கவிதா, மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் கயல்விழி மற்றும் போலீஸாா் செந்தில்குமாரை கீழே இறங்கும்படி அறிவுறுத்தினா். இதனால், அவா் செல்லிடப்பேசி கோபுரத்திலிருந்து கீழே இறங்கிவந்தாா்.
பிறகு, செந்தில்குமாரை வட்டாட்சியா் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று, பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, மன்னாா்குடி ஆதிதிராவிடா் நலத்துறை தனி வட்டாட்சியா் மூலம் மனைப் பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்து, செந்தில்குமாரை அவரது வீட்டுக்கு அனுப்பிவைத்தனா்.
பின்னா், இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...