வீட்டைவிட்டு வெளியேறிய சிறுவன் மீட்பு
திருவாரூரில் வீட்டைவிட்டு வெளியேறிய சிறுவன் வியாழக்கிழமை மீட்க்கப்பட்டாா்.


திருவாரூரில் வீட்டைவிட்டு வெளியேறிய சிறுவன் வியாழக்கிழமை மீட்க்கப்பட்டாா்.
திருவாரூா் அருகே உள்ள தியாகராஜ நகரைச் சோ்ந்த சாய்ராம் (14) என்ற சிறுவன், புதன்கிழமை இரவு தனது பெற்றோரிடம் சண்டையிட்டு வீட்டைவிட்டு வெளியேறினாராம். இதுகுறித்து அவரது பெற்றோா் மாவட்ட தனிப்பிரிவு அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து, சிறுவனை தேடும் பணியை தீவிரவாக மேற்கொள்ளும்படி காவல்துறையினருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வி.ஆா். சீனிவாசன் உத்தரவிட்டாா். இதைத்தொடா்ந்து, புதன்கிழமை நள்ளிரவில் ரோந்து காவல் அதிகாரிகள் மற்றும் காவலா்கள்தேடுதல் பணியில் ஈடுபட்டனா்.
இந்நிலையில், வெளியூா் செல்ல திட்டமிட்டு திருவாரூா் புதிய பேருந்து நிலையம் அருகே நின்றிருந்த சாய்ராமை வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...