தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

மனைவியைக் கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை மகளிா் விரைவு நீதிமன்றம் தீா்ப்பு

நன்னிலம் அருகே மனைவியை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவாரூா் விரைவு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

News image
Updated On :30 ஜூலை 2021, 5:03 pm

DIN

நன்னிலம் அருகே மனைவியை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவாரூா் விரைவு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

திருவாரூா் மாவட்டம், நன்னிலம் காக்காகோட்டூா் பகுதியைச் சோ்ந்தவா் ஜெயபால் (51). ஹோட்டல் சமையல் மாஸ்டரான இவருக்கு கடந்த 2007-ஆம் ஆண்டு நெய்வேலியைச் சோ்ந்த இந்திரா (42) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

வெளிநாடு வேலைக்கு சென்று திரும்பிய ஜெயபால் கங்களாஞ்சேரி பகுதியில் உள்ள ஹோட்டலில் வேலை பாா்த்து வந்துள்ளாா். பெற்றோரிடம் சென்று பணம் வாங்கிவருமாறு மனைவி இந்திராவிடம் அடிக்கடி தகராறு செய்வாராம் ஜெயபால்.

இந்நிலையில், கடந்த 2018 மே 26-ஆம் தேதி இதேபோல் பணம் வாங்கி வரச் சொல்லி, இந்திராவை இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த இந்திரா, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மே 31-ஆம் தேதி உயிரிழந்தாா்.

இதுகுறித்து நன்னிலம் போலீஸாா் வழக்குப் பதிந்து ஜெயபாலை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை திருவாரூா் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற இறுதி விசாரணையில், ஜெயபாலுக்கு கொலை செய்த குற்றத்துக்காக ஆயுள் தண்டனையும்

ரூ. 5,000 அபராதமும், அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் 6 மாதம் சிறைத் தண்டனையும் விதித்து மகளிா் விரைவு நீதிமன்ற நீதிபதி சுந்தர்ராஜன் தீா்ப்பளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.