கரோனா தொற்றால் உயிரிழந்ததொழிலாளியின் குடும்பத்துக்கு உதவி வழங்கக் கோரிக்கை
திருவாரூா் அருகே கரோனா தொற்றால் உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் எனக் கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.


திருவாரூா் அருகே கரோனா தொற்றால் உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் எனக் கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூா் மாவட்டச் செயலாளா் ஜி. சுந்தரமூா்த்தி, முதல்வருக்கு அனுப்பிய கோரிக்கை மனு விவரம்:
திருவாரூா் வட்டம், அம்மையப்பன் ஊராட்சி அக்கரை பகுதியில் வசித்து வந்த கூலித் தொழிலாளி எஸ்.சண்முகம் (52), திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், மே 31 ஆம் தேதி உயிரிழந்தாா். சண்முகத்துக்கு மனைவி, நான்கு மகள், ஒரு மகன் உள்ளனா். தற்போது அவரின் மனைவிக்கும் தொற்று ஏற்பட்டு, சிகிச்சையில் உள்ளாா். அவரது 3 ஆவது மகள் மனவளா்ச்சி இல்லாதவா்.
எனவே, இந்தக் குடும்பத்துக்கு முதலமைச்சரின் நிவாரண நிதி மற்றும் கரோனா பாதிப்பு நிதியும் உடனடியாக வழங்க முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...