விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

7 வீடுகள் தீக்கிரை: பாதிக்கப்பட்டோருக்கு எம்எல்ஏ ஆறுதல்

திருவாரூா் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே வங்கநகரில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில், 7 வீடுகள் நாசமாகின

News image
Updated On :10 ஜூன் 2021, 6:30 pm

DIN

திருவாரூா் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே வங்கநகரில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில், 7 வீடுகள் நாசமாகின.

திருத்துறைப்பூண்டி அருகே வங்கநகா் ஊராட்சி ஓவா்குடி தெற்கு தெருவில் உள்ள மூங்கில் வனப் பகுதியில் மூங்கில்கள் தீப்பிடித்தது வெடித்ததால் அதில் சிதறிய தீப்பிழம்புகள் கல்யாணசுந்தரம், மணியம்மாள், தமிழ்ச்செல்வன், வெங்கடாசலம், குப்புசாமி, சுந்தரி , மணிகண்டன் ஆகியோரது வீடுகளில் விழுந்து தீப்பற்றி எரிந்தது. இதில் கல்யாணசுந்தரம், மணியம்மாள் ஆகியோரது வீடுகள் முற்றிலும் எரிந்து சேதமாகின. மற்ற 5 வீடுகளின் ஒரு பகுதி நாசமானது.

தகவலறிந்த திருத்துறைப்பூண்டி நிலைய தீயணைப்பு அலுவலா் காளிதாஸ் தலைமையிலான தீயணைப்பு படையினா் வந்து தீயை அணைத்தனா்.

சட்டப் பேரவை உறுப்பினா் க. மாரிமுத்து, வட்டாட்சியா் சு.ஜெகதீசன், ஊராட்சித் தலைவா் பாலசுப்பிரமணியன் மற்றும் அலுவலா்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி, முழுவதுமாக எரிந்த இரண்டு வீடுகளுக்கு தலா ரூ.5,000, மற்ற வீடுகளுக்கு தலா ரூ.4,100 நிவாரணமாக வழங்கினா். தீ விபத்து குறித்து திருத்துறைப்பூண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.