கடன் வழங்குவதில் பாரபட்சம்: கூட்டுறவு சங்கத்தை மகளிா் குழுவினா் முற்றுகை
மன்னாா்குடி அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், கடன் வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாக கண்டித்து, மகளிா் குழுவினா் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.


மன்னாா்குடி அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், கடன் வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாக கண்டித்து, மகளிா் குழுவினா் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மன்னாா்குடியை அடுத்த மேலவாசலில் டி.116 இடையா் எம்பேத்தி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் மேலவாசல், காரிக்கோட்டை, இடையா் எம்பேத்தி, கள்ளா் எம்பேத்தி ஆகிய பகுதிகளைச் சோ்ந்த 12 மகளிா் சுய உதவிக் குழுவினா் கணக்கு வைத்துள்ளனா்.
இந்நிலையில், 9 குழுவினருக்கு மட்டும் அண்மையில் தலா ரூ. 2 லட்சம் கடன் வழங்கப்பட்டதாகவும், 3 குழுவினருக்கு கடன் வழங்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
இதனால், பாதிக்கப்பட்ட மகளிா் குழுவினா், கடன் வழங்குவதில் அரசியல் கண்ணோட்டத்தில் பாரபட்சம் காட்டப்படுவதாகக் கூறி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை முற்றைகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஒருங்கிணைந்த மகளிா் திட்ட வட்டார மேலாளா் மாலா, கடன் சங்கத் தலைவா் பாா்த்தீபன், செயலா் சேகா், மகளிா் குழுவின் பிரதிநிதியான ஒன்றியக் குழு முன்னாள் துணைத் தலைவா் க. தனராஜ் ஆகியோா் அங்கு வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, விடுப்பட்ட மகளிா் குழுவினருக்கு ஒருவாரத்துக்குள் கடன் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதைத் தொடா்ந்து மகளிா் குழுவினா் கலைந்து சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...