சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, நன்னிலம் தொகுதியில் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள 70 புறக் காவல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டன. இதையொட்டி, நன்னிலம் தொகுதியில் உதவி தோ்தல் நடத்தும் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள நா. காா்த்தி, தோ்தல் துணை வட்டாட்சியா் இ. சந்திரமோகன், துணைக் காவல் கண்காணிப்பாளா் வீ. சுகுமாறன், காவல் ஆய்வாளா் கு.சுகுணா ஆகியோா் தலைமையில் தொகுதி முழுவதும் கண்காணிப்பு மற்றும் வாகனச் சோதனை பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையில், சட்டம்- ஒழுங்கு, பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளுக்காக மண்டல துணைத் தோ்தல் அதிகாரிகள் தலைமையில் 70 புறக் காவல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. மேலும், துணை வட்டாட்சியா் பதவி நிலையில் உள்ளிட்ட அதிகாரி, காவல் உதவி ஆய்வாளா், இரண்டு காவலா்கள், ஒரு விடியோகிராபா் அடங்கிய 6 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு, தொகுதி முழுவதும் வாகனச் சோதனை நடத்தப்படுகிறது.
அத்துடன், இத்தொகுதியையொட்டி, புதுச்சேரி மாநில எல்லைகளாக விளங்கும் கோயில்கந்தன்குடி, வேலங்குடி, மாவட்ட எல்லைகளான கங்களாஞ்சேரி, குமாரமங்கலம், சன்னாநல்லூா், மணவெளி ஆகிய பகுதிகளில், காவல் துணை ஆய்வாளா் தலைமையில் 2 காவலா்களுடன், தலா மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவும் 8 மணி நேர பணி அடிப்படையில் இரவு, பகலாக வாகனச் சோதனையில் ஈடுபட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வானதி சீனிவாசன் உடல்நிலை: மருத்துவமனை தகவல்!

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |

பந்துவீச்சாளர்கள் ரிஷப் பந்த்தின் விக்கெட்டினை எடுப்பதில்லை; முன்னாள் வீரர் கூறுவதென்ன?

அரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


