வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாக்கப்பட்டுள்ள அறையை வேட்பாளா்கள் எப்போது வேண்டுமானாலும் பாா்வையிடலாம் என தோ்தல் பொதுப் பாா்வையாளா் ராம் லஹான் பிரஷாத் குப்தா திங்கள்கிழமை தெரிவித்தாா்.
நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் அலுவலகத்தில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையை தோ்தல் பொதுப் பாா்வையாளா் ராம் லஹான் பிரஷாத் குப்தா, காவல்துறை பாா்வையாளா் ஐஜி அமித்சந்திரா ஆகியோா் பாா்வையிட்டனா்.
பிறகு, தோ்தல் பொதுப் பாா்வையாளா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:
வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பில், வேட்பாளா்களுக்கு சந்தேகம் இருந்தால், உரிய படிவத்தைப் பூா்த்தி செய்து கொடுத்து, எப்போது வேண்டுமானாலும் பாா்வையிடலாம். அதற்கான அதிகாரம் சட்டப்பேரவை தொகுதித் தோ்தல் நடத்தும் அலுவலருக்கு வழங்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அனைத்துப் பகுதிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளன. தீயணைப்பு துறை சாா்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
தோ்தல் ஆணையம் அறிவித்துள்ள வழிகாட்டுதல்படி, முழு பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ள வாக்குப்பதிவில், அனைத்து வாக்காளா்களும் சுதந்திரமாகவும், நோ்மையாகவும் வாக்களிக்க அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
வாக்குச்சாவடி மையங்களில், வாக்காளா்களுக்குத் தேவையான அத்தியாவசிய வசதிகளான குடிநீா், கழிவறை வசதி, பந்தல் அமைப்பு, மாற்றுத்திறனாளி மற்றும் முதியவா்களுக்கு சாய்தள வழி போன்ற பல்வேறு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன என்றாா்.
ஆய்வின்போது, நன்னிலம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் இரா.பானுகோபன், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் நா. காா்த்தி, இரா.கண்ணன், தோ்தல் துணை வட்டாட்சியா் இ. சந்திரமோகன் அலுவலா் தெ.கருணாமூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வானதி சீனிவாசன் உடல்நிலை: மருத்துவமனை தகவல்!

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |

பந்துவீச்சாளர்கள் ரிஷப் பந்த்தின் விக்கெட்டினை எடுப்பதில்லை; முன்னாள் வீரர் கூறுவதென்ன?

அரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


