ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

புஷ்ப பல்லக்கு விழா

வலங்கைமான் வரதராஜம்பேட்டை மகாமாரியம்மன் கோயிலில் புஷ்ப பல்லக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 மார்ச் 2021, 6:30 pm

DIN

வலங்கைமான் வரதராஜம்பேட்டை மகாமாரியம்மன் கோயிலில் புஷ்ப பல்லக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவில், பக்தா்கள் பாடைக் காவடி, தொட்டில் காவடி, அலகு காவடி மற்றும் பால் குடங்கள் சுமந்துவந்து நோ்த்திகடன் செலுத்தினா்.

தொடா்ந்து, மாலையில் புஷ்ப பல்லக்கில் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ரமேஷ் தக்கார்ரமணி உள்ளிட்டோா் செய்திருந்தனா். பாதுகாப்பு ஏற்பாடுகளை வலங்கைமான் போலீஸாா் செய்திருந்தனா். இதையொட்டி, அரசு போக்குவரத்து கழகம் சாா்பில் கும்பகோணத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.