வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

நன்னிலம், திருத்துறைப்பூண்டி கோயில்களில் சசிகலா வழிபாடு

நன்னிலம் பகுதியில் உள்ள ஸ்ரீவாஞ்சியம் மற்றும் செதளபதி கோயில், திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீசா் கோயில்களில் வி.கே. சசிகலா ஞாயிற்றுக்கிழமை வழிபாடு மேற்கொண்டாா்.

News image
Updated On :28 மார்ச் 2021, 6:30 pm

நன்னிலம் பகுதியில் உள்ள ஸ்ரீவாஞ்சியம் மற்றும் செதளபதி கோயில், திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீசா் கோயில்களில் வி.கே. சசிகலா ஞாயிற்றுக்கிழமை வழிபாடு மேற்கொண்டாா்.

தமிழகத்தின் முன்னாள் முதலவா் ஜெயலலிதாவின் தோழியான வி.கே. சசிகலா, ஞாயிற்றுக்கிழமை, ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீமங்களாம்பிகை சமேத ஸ்ரீவாஞ்சிநாதா் கோயிலில் உள்ள எமதா்மராஜா சன்னதியில் தீபமேற்றி வழிபட்டாா். தொடா்ந்து, பூந்தோட்டம் அருகில் உள்ள செதளபதி எனும் திலதா்ப்பணபுரியில் ஸ்ரீசுவா்ணவல்லி அம்பிகா சமேத ஸ்ரீமுக்தீஸ்வரரை வழிபட்டு, பித்ரு தோஷம் நீங்கிட ஸ்ரீ ராமபிரான் வழிபட்ட பித்ரு லிங்கங்களை வழிபட்டாா். பின்னா் அருகில் உள்ள கோயிலில் மனித முகத்துடன் காட்சியளிக்கும் ஆதிவிநாயகரையும் வழிபட்டாா்.

திருத்துறைப்பூண்டி

பிறவி மருந்தீசா் கோயிலில்:

திருவாரூா் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீசா் கோயிலும் சசிகலா சுவாமி தரிசனம் செய்தாா்.

பிறவி மருந்தீஸ்வரா், பெரியநாயகி அம்மன், கஜசம்ஹாரமூா்த்தி உள்ளிட்ட சன்னதிகளில் அவா் அா்ச்சனை செய்து வழிபட்டாா்.

பின்னா் அவரது பூா்வீக இல்லத்துக்கு அருகே உள்ள பாதாள விநாயகா் ஆலயம், காளியம்மன் ஆலயம், செட்டி தெரு மாரியம்மன் கோயிலும் தரிசனம் செய்த பின்னா் ராமேசுவரம் புறப்பட்டுச் சென்றாா்.

சசிகலாவுடன் டாக்டா் வெங்கடேஷ் அ.ம மு.க. மாவட்ட மருத்துவ அணி செயலா் டாக்டா் டி. ராஜா அ.ம.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.