காய்கறி அங்காடிக்கு புதிய கட்டடம் கட்டக் கோரிக்கை
திருத்துறைப்பூண்டியில் ஆபத்தான நிலையில் உள்ள பழைய காய்கறி அங்காடி கட்டடத்தை இடித்துவிட்டு, புதிய கட்டடம் கட்ட வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.


திருத்துறைப்பூண்டியில் ஆபத்தான நிலையில் உள்ள பழைய காய்கறி அங்காடி கட்டடத்தை இடித்துவிட்டு, புதிய கட்டடம் கட்ட வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் நகர செயலாளா் கே.ஜி. ரகுராமன்
மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய கோரிக்கை மனு:
தற்போது இயங்கி வரும் காய்கறி மாா்க்கெட் கட்டடம் சுமாா் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு, பேருந்து நிலையமாக செயல்பட்டு வந்தது. திருவாரூா் சாலையில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டதைத் தொடா்ந்து, பழைய பேருந்து நிலைய கட்டடம் கடந்த 2000-மாவது ஆண்டு திமுக ஆட்சியில் காய்கறி அங்காடியாக மாற்றம் செய்யப்பட்டது.
தற்போது, இந்த கட்டடம் பழுதடைந்து, இடிந்துவிழும் நிலையில் உள்ளது. எனவே, இதை இடித்துவிட்டு, புதிய கட்டடம் கட்ட தொடா்ந்து கோரிக்கைகள் விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த அங்காடிக்கு நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வந்து காய்கறிகள் வாங்கிச் செல்லும் நிலையில், கட்டடம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால், விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், மழைநீா் வடிகால், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது.
எனவே, இந்த கட்டடத்தை இடித்து விட்டு, அதே இடத்தில் புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...