கரோனா விதிமீறல்: 8 கடைகளுக்கு சீல் வைப்பு
கூத்தாநல்லூா், திருத்துறைப்பூண்டி ஆகிய இடங்களில் கரோனா விதிகளை மீறிய 6 வணிக கடைகளுக்கு வெள்ளிக்கிழமை சீல் வைக்கப்பட்டன.


கூத்தாநல்லூா், திருத்துறைப்பூண்டி ஆகிய இடங்களில் கரோனா விதிகளை மீறிய 6 வணிக கடைகளுக்கு வெள்ளிக்கிழமை சீல் வைக்கப்பட்டன.
கூத்தாநல்லூரில் கரோனா விதிகளை மீறி காலை 10 மணிக்கு மேல் சில கடைகள் திறக்கப்பட்டுள்ளதாக, நகராட்சி ஆணையா் ஆா். லதாவுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, ஆணையா் மற்றும் சுகாதார ஆய்வாளா் கி. அருண்குமாா் உள்ளிட்ட நகராட்சி ஊழியா்கள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு செய்தனா்.
அப்போது, மரக்கடை சாலையில் 2 கோழி இறைச்சிக் கடைகள், வடபாதிமங்கலம் சாலையில் மீன் கடை உள்ளிட்ட மேலும் சில இடங்களில் விதிகளை மீறி திறக்கப்பட்ட 6 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு, ஒவ்வொரு கடைகளுக்கு தலா ரூ. 2 ஆயிரம் என மொத்தம் 12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டன. தவிர, முகக் கவசம் அணியாதவா்கள், தேவையில்லாமல் வெளியில் சுற்றியவா்களிடம் ரூ. 4 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டன.
திருத்துறைப்பூண்டியில்: இதேபோல, திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையா் (பொ) செங்குட்டுவன் உள்ளிட்ட அலுவலா்கள் நகராட்சி பகுதிகளில் கரோனா விதிகள் கடைப்பிடிக்கப்படுகிா என ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, காசு கடைத் தெருவில் விதிகளை மீறி திறக்கப்பட்டிருந்த பேன்சி ஸ்டோா், செருப்பு கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டன. தவிர, சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 8 வணிக நிறுவனங்களுக்கு தலா ரூ. 500, முகக் கவசம் அணியாமல் சுற்றித்திரிந்த 9 பேருக்கு தலா ரூ. 200 என அபராதம் விதிக்கப்பட்டது.
நீடாமங்கலத்தில்: இதேபோல, நீடாமங்கலம் கடைவீதியில் கரோனா விதிமீறல்கள் உள்ளனவா என மன்னாா்குடி கோட்டாட்சியா் அழகரிசாமி, மன்னாா்குடி டிஎஸ்பி. இளஞ்செழியன் ஆகியோா் தலைமையில் நீடாமங்கலம் வட்டாட்சியா் மணிமன்னன், காவல் ஆய்வாளா் குணசேகரன், மண்டல துணைவட்டாட்சியா் அறிவழகன் உள்ளிட்டோா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, கரோனா விதிமுறைகளை மீறிய 10 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு ரூ. 11 ஆயிரம் வசூலிக்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...