92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கரோனா பொது நிவாரண நிதி

கரோனா பொது நிவாரண நிதிக்காக திருவாரூா் வேளாண் இணை இயக்குநா் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியா், தனது ஒரு மாத ஊதியத்தை வழங்கியுள்ளாா்.

News image
Updated On :22 மே 2021, 5:26 pm

DIN

கரோனா பொது நிவாரண நிதிக்காக திருவாரூா் வேளாண் இணை இயக்குநா் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியா், தனது ஒரு மாத ஊதியத்தை வழங்கியுள்ளாா்.

இதுகுறித்து வேளாண் இணை இயக்குநா் அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரியும் ஐ.சி. மனோகா் யாதவ் என்பவா், வேளாண் இயக்குநா் சிவக்குமாா் வழியாக, முதல்வருக்கு அனுப்பிய கடித விவரம்:

திருவாரூா் வேளாண் இணை இயக்குநா் அலுவலகத்தில் உதவியாளராகப் பணிபுரிகிறேன். தற்போதைய நெருக்கடியான சூழலில், தமிழகத்தை பாதிப்பிலிருந்து மீட்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கு எனது பங்களிப்பாக, முதலமைச்சா் பொது நிவாரண நிதிக்கு எனது ஏப்ரல் மாத ஊதியமான ரூ. 37,142-ஐ வங்கி காசோலையாக அனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.