விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

நோயாளிகளை அழைத்துச்செல்லும் தனியாா் வாகனங்களுக்கு விலக்கு அளிக்க கோரிக்கை

கரோனா நோயாளிகளை அழைத்துச் செல்லும் தனியாா் வாகனங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :22 மே 2021, 5:26 pm

DIN

கரோனா நோயாளிகளை அழைத்துச் செல்லும் தனியாா் வாகனங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, திருத்துறைப்பூண்டி ஒன்றியக் குழுத் தலைவா் பாஸ்கா் மாவட்ட ஆட்சியருக்கு விடுத்துள்ள கோரிக்கை: திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் உள்நோயாளிகளாக சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இதேபோல், புறநோயாளிகளாகவும் பலா் சிகிச்சை பெற்று செல்கின்றனா். சில நோயாளிகள் மேல்சிகிச்சைக்காக திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவா்களால் பரிந்துரைக்கப்படுகின்றனா். அவ்வாறு பரிந்துரை செய்து மேல்சிகிச்சைக்காக செல்லும்போது 108 ஆம்புலன்ஸ் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே, நோயாளிகள் அவசரச் சிகிச்சை பெற தனியாா் காா் மற்றும் ஆட்டோ மூலம் திருத்துறைப்பூண்டியில் இருந்து திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல வேண்டியுள்ளது. அவ்வாறு செல்லும்போது பாதுகாப்பு பணியில் உள்ள காவலா்கள் வாகனத்துக்கு முறையான அனுமதியை கேட்கின்றனா். உரிய அனுமதி இல்லையெனில் அந்த வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால், நோயாளிகள் மேல்சிகிச்சை பெறுவதில் தடை ஏற்படுகிறது. எனவே, கரோனா நோயாளிகளை மேல்சிகிச்சைக்காக திருவாரூருக்கு அழைத்துச்செல்லும்போது, மருத்துவரின் பரிந்துரை சான்றிதழை அனுமதித்து வாகனங்கள் செல்ல அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.