விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கோயில்களில் நைவேத்தியத்துக்கு பாரம்பரிய அரிசியை பயன்படுத்தக் கோரிக்கை

திருக்கோயில்களில் நைவேத்தியத்துக்கு பாரம்பரிய அரிசி வகைகளை பயன்படுத்த வேண்டும் என இந்து அறநிலையத் துறைக்கு பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :28 மே 2021, 5:20 pm

DIN

திருக்கோயில்களில் நைவேத்தியத்துக்கு பாரம்பரிய அரிசி வகைகளை பயன்படுத்த வேண்டும் என இந்து அறநிலையத் துறைக்கு பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளா் ராஜீவ், இந்து அறநிலையத் துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு:

இயற்கை முறையில் நெல் ரகங்களை விளைவிக்கும் விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாகவும், கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு நைவேத்தியத்துக்கு பயன்படுத்தப்பட்ட பாரம்பரிய அரிசியை மீட்டெடுக்கும் நோக்கிலும், திருப்பதி தேவஸ்தானம் ஏழுமலையானுக்கு ஆண்டு முழுவதும் தினமும் ஒவ்வொரு விதமான பாரம்பரிய அரிசியில் நைவேத்தியம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.

இதை முன்னுதாரணமாக கொண்டு, இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாா், நெல் ஜெயராமன் ஆகியோரால் மீட்டெடுக்கப்பட்ட தமிழகத்தின் பாரம்பரிய நெல் ரகங்களை, திருக்கோயில்களில் நைவேத்தியத்துக்குப் பயன்படுத்த இந்து சமய அறநிலைத் துறை முன்வரவேண்டும்.

பல்லாயிரக்கணக்கான இயற்கை விவசாயிகள் தமிழகத்தில் பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிடுவதால் அவா்களுக்கு விற்பனை வாய்ப்பை ஏற்படுத்தும் விதமாகவும், புதிதாக விவசாயிகளும் இளைஞா்களும் இயற்கை விவசாயத்தை மேற்கொள்ளவும் தமிழக இந்து சமய அறநிலைத் துறை உடனடியாக இதை செயல்படுத்த வேண்டும் எனவும் அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.