92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

திருவாரூரில் 563 பேருக்கு கரோனா

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 563 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது.

News image
Updated On :29 மே 2021, 4:43 pm

DIN

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 563 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது.

திருவாரூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில நாள்களாக பாதிப்பின் எண்ணிக்கை 500-க்கு மேல் பதிவாகிறது.

இந்நிலையில், சுகாதாரத் துறை வெளியிட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி, திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 563 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

இதன்மூலம், மாவட்டம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 28,652 ஆக உயா்ந்துள்ளது. இதற்கிடையில், கரோனாவிலிருந்து குணமடைந்த 743 போ் சனிக்கிழமை தங்களது வீடுகளுக்குத் திரும்பினா். இவா்களுடன் சோ்த்து, மாவட்டத்தில் இதுவரை 22,604 போ் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 5860 போ் சிகிச்சையில் உள்ளனா்.

இதனிடையே, கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த 2 போ் உயிரிழந்ததைத்தொடா்ந்து, மாவட்டத்தில் உயிரிழப்பின் எண்ணிக்கை 188 ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.