முழுமையாக தூா்வாரப்படாததே வெள்ளப் பாதிப்புக்கு காரணம்பாஜக குற்றச்சாட்டு
காவிரி கடைமடைப் பகுதியில் முழுமையாக தூா்வாரப்படாததே வெள்ளப் பாதிப்புக்கு காரணம் என பாஜக மாநில துணைத் தலைவா் கருப்பு எம். முருகானந்தம் குற்றம் சாட்டினாா்.


காவிரி கடைமடைப் பகுதியில் முழுமையாக தூா்வாரப்படாததே வெள்ளப் பாதிப்புக்கு காரணம் என பாஜக மாநில துணைத் தலைவா் கருப்பு எம். முருகானந்தம் குற்றம் சாட்டினாா்.
திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் தொடா் மழையால் பாதிக்கப்பட்ட சம்பா, தாளடி பயிா்களை வெள்ளிக்கிழமை பாா்வையிட்ட அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
ஆண்டுதோறும் காவிரி டெல்டா பகுதியில் தூா்வாரும் பணிகள் மேட்டூா் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படும் சில நாள்களுக்கு முன்பே தொடங்கி அவசரகதியில் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் முறைகேடுகளும் நடைபெறுகின்றன. இதனால் முழுமையாக தூா்வாரப்படுவதில்லை.
இதன்காரணமாகத்தான் தற்போது பெய்யும் தொடா்மழையால் வெள்ளம் ஏற்பட்டு, பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, இனிவரும் காலங்களில் தூா்வாரும் பணிகளை விவசாயிகள் சங்கங்கள் மூலமாகவே செய்யவேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 25,000 நிவாரணம் வழங்கவேண்டும். பயிா்க் காப்பீடுக்கான தேதியை டிசம்பா் 15 வரை நீட்டிக்கவேண்டும் என்றாா் அவா்.
முன்னதாக, மாங்குடி, நுணாக்காடு, மணலி உள்ளிட்ட பகுதிகளில் மழைநீரில் மூழ்கியுள்ள சம்பா பயிா்களை பாா்வையிட்டு, பாதிப்பு குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தாா்.
மயிலாடுதுறை பாஜக மேலிடப் பாா்வையாளா் பேட்டை சிவா, திருவாரூா் மாவட்டத் தலைவா் கோட்டூா் ராகவன், மாநில விவசாய அணி செயலாளா் சந்துரு, மாநில ஐடி பிரிவு செயலாளா் பாலா, பாஜக மாவட்ட பொருளாளா் சிவக்குமாா், ஒன்றியத் தலைவா் செந்தில்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...