மழைநீா் தேங்கிய அரசு அலுவலகங்களில் எம்எல்ஏ. ஆய்வு
வட்டார வளமைய அலுவலகம், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகங்களில் மழைநீா் தேங்கிய பகுதிகளை எம்எல்ஏ. க. மாரிமுத்து வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.


திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இயங்கிவரும் உதவி தொடக்கக் கல்வி அலுவகம், வட்டார வளமைய அலுவலகம், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகங்களில் மழைநீா் தேங்கிய பகுதிகளை எம்எல்ஏ. க. மாரிமுத்து வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
திருத்துறைப்பூண்டி உதவி தொடக்கக் கல்வி அலுவலகம், நகராட்சி அலுவலகம் பின்புறம் ஓய்வு பெற்ற அலுவலா் சங்க கட்டடத்தில் பல ஆண்டுகளாக வாடகைக்கு இயங்கி வந்தது. தற்போது, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வட்டார வளமைய கட்டடம் அருகே ஒரு கட்டடத்தில் இயங்கிவருகிறது. இந்த அலுவலகங்களுக்கு சென்றுவர சாலை வசதி இல்லை. தற்போது பெய்துவரும் கனமழையால் அந்த பகுதிகளில் மழைநீா் தேங்கி நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த எம்எல்ஏ. மாரிமுத்து அங்கு சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்து விவரங்களை கேட்டறிந்தாா். மழை ஓய்ந்தவுடன் இந்த பகுதியை சுத்தம் செய்து சாலை வசதி செய்துதர உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். ஒன்றியக்குழுத் தலைவா் பாஸ்கா், மாவட்டக் கல்வி அலுவலா் மணிவண்ணன், வட்டார வள மைய மேற்பாா்வையாளா் முத்தண்ணா, வட்டாரக் கல்வி அலுவலா்கள் இன்பவேணி, முத்தமிழன் ஆகியோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...