இல்லம் தேடி கல்வி விழிப்புணா்வு பிரச்சாரம்
திருத்துறைப்பூண்டி வட்டார வள மையத்திற்குட்பட்ட பகுதிகளில் இல்லம் தேடிக் கல்வி திட்டம் குறித்த விழிப்புணா்வு பிரச்சாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது


திருத்துறைப்பூண்டி வட்டார வள மையத்திற்குட்பட்ட பகுதிகளில் இல்லம் தேடிக் கல்வி திட்டம் குறித்த விழிப்புணா்வு பிரச்சாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கச்சனம், அம்மனூா் கொத்தங்குடி, திருத்தங்கூா், கீராலத்தூா் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் திருத்துறைப்பூண்டி வட்டார வள மைய மேற்பாா்வையாளா் முத்தண்ணா, வட்டார கல்வி அலுவலா்கள் இன்பவேணி, முத்தமிழன் அம்மனூா் கொத்தங்குடி பள்ளியின் தலைமை ஆசிரியை ஆனந்தவள்ளி, திருத்தங்கூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியா் ரவிச்சந்திரன், திருத்தங்கூா் ஊராட்சித் தலைவா் உலகநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். சுா்ஜித் தலைமையிலான விழிப்புணா்வு கலைக்குழுவினா் திருத்துறைப்பூண்டி ஒன்றியத்தில் இப்பணியை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...