92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு

சட்டப்பேரவை உறுப்பினருமான பூண்டி கே. கலைவாணன் மதிய உணவு வழங்கினாா்.

News image
Updated On :26 நவம்பர் 2021, 5:42 pm

DIN

திருவாரூரில் வியாழக்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக மாவட்டச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பூண்டி கே. கலைவாணன் மதிய உணவு வழங்கினாா்.

திருவாரூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், திருவாரூா் நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேங்கியுள்ளது. ஒரு சில வீடுகளிலும் தண்ணீா் புகுந்துள்ளது.

இந்தநிலையில், திருவாரூரில் நகரப் பகுதியில் தண்ணீரால் சூழப்பட்ட பகுதிகளை திமுக மாவட்டச் செயலாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான பூண்டி கே. கலைவாணன், பாா்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினாா். பின்னா், குளுந்தான்குளம் கீழ்க்கரை பகுதியில் உள்ள மக்களுக்கு மதிய உணவை அவா் வழங்கினாா்.

நகரச் செயலாளா் எஸ். பிரகாஷ், நகா்மன்ற முன்னாள் துணைத் தலைவா் டி. செந்தில் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.