கூத்தாநல்லூரில் 5 இடங்களில் கிராம சபைக் கூட்டம்

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டத்தில், 5 கிராமங்களில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
கூத்தாநல்லூரில் 5 இடங்களில் கிராம சபைக் கூட்டம்
கூத்தாநல்லூரில் 5 இடங்களில் கிராம சபைக் கூட்டம்

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டத்தில், 5 கிராமங்களில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, அனைத்து கிராமங்களிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டத்தில், கூத்தாநல்லூர் பிர்க்காவில் 17, கமலாபுரம் பிர்க்காவில் 15 மற்றும் வடபாதிமங்கலம் பிர்க்காவில் 23 என 55 கிராமங்கள் உள்ளன.

இதில், ஆய்குடி, அதங்குடி, பொதக்குடி, சித்தாம்பூர் மற்றும் வெள்ளக்குடி உள்ளிட்ட 5 கிராமங்களில் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன. பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நீடாமங்கலம் ஒன்றியம்,  சித்தாம்பூர் ஊராட்சியில், ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

முன்னதாக, மகாத்மா காந்தியின் உருவப் படத்திற்கு மாலையணிவித்து, மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, நடத்தப்பட்ட கிராம சபைக் கூட்டத்திற்கு, ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.ரெத்தினம்வேல் தலைமை வகித்தார். துணைத் தலைவர் எஸ்.ஜெயபால் முன்னிலை வகித்தார்.

6 ஆவது வார்டு உறுப்பினர் கே.ஜீவிதா வரவேற்றார். சிறப்பு விருந்தினராக, மேட்டுப்பாளையம் லயன்ஸ் சங்கத் தலைவர் ப.முருகையன் பங்கேற்றார். குடிதாங்கிச்சேரி தமிழர் தெரு பிடாரி அம்மன் குளம், பெரியக்குளம், கள்ள வாழாச்சேரி சின்னக்குளம், திருவாசகம் குளம் உள்ளிட்ட குளங்களில் படித்துறை அமைக்க வேண்டும்.

சுடுகாடு மயானக் கொட்டகை அமைக்கப்பட வேண்டும். கள்ள வாழாச்சேரி சுடுகாட்டுக்குச் சாலை அமைக்க வேண்டும். அகம்படையான் ஆற்றின் குறுக்கே உள்ள தட்டிப் பாலத்தை அகற்றி விட்டு, இரும்புப் பாலம் கட்டப்பட வேண்டும். வடக்குத் தெரு சுடுகாட்டுச் சாலையை தார்ச் சாலையாக அமைக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன. நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை கிராம மக்கள் முன்னிலையில், ஊராட்சி செயலாளர் டி.மோகன் வாசித்தார்.

கூட்டத்தில், உறுப்பினர்கள் டி.முருகானந்தம், இரா.பிரபாகரன், ஜெ.கலா, எம்.ரேணுகா உள்ளிட்ட கிராம மக்கள் பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com