கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

நாகை மாவட்டத்தில் பட்டா பிழைத் திருத்த சிறப்பு முகாம்

நாகை மாவட்டத்துக்குள்பட்ட 10 வருவாய் கிராமங்களில் பட்டா பிழைத் திருத்த சிறப்பு முகாம்கள் புதன்கிழமை (அக்.27) நடைபெறும் என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :25 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

நாகை மாவட்டத்துக்குள்பட்ட 10 வருவாய் கிராமங்களில் பட்டா பிழைத் திருத்த சிறப்பு முகாம்கள் புதன்கிழமை (அக்.27) நடைபெறும் என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளின் பட்டாக்களில் உள்ள பிழைகளை திருத்துவதற்கான சிறப்பு முகாம்கள் மாவட்டத்தில் 10 வருவாய் கிராமங்களில் புதன்கிழமை நடைபெறுகின்றன. 2014 முதல் 2016 வரை தமிழ்நிலம் மென்பொருளில் கிராம கணக்குகள் பதிவேற்றம் செய்தபோது ஏற்பட்ட பிழைகள் மட்டும் இந்தச் சிறப்பு முகாமில் திருத்தம் செய்யப்படும்.

அதன்படி, உட்பிரிவு எண், புலஎண், பரப்பு, பட்டாதாரா் பெயா், உறவுமுறை, பட்டாவில் உள்ள கலங்கள், பரப்புக்கு அருகே உள்ள பட்டாதாரரின் பெயா் ஆகியவற்றில் திருத்தங்கள் இருந்தால் இந்த சிறப்பு முகாமில் திருத்திக்கொள்ளலாம்.

முகாம் இடங்கள்: நாகை மாவட்டத்தில் வட்டம் வாரியாக நடைபெறும் சிறப்பு முகாம்கள் நடைபெறும் கிராமங்கள் நாகை: நாகூா் கிராமம், நாகப்பட்டினம் கிராமம், பாலையூா், வடகுடி. கீழ்வேளூா்: ஆணைமங்கலம், தேவூா். வேதாரண்யம்: தோப்புத்துறை, நெய்விளக்கு, மகாராஜபுரம் கீழ்பாதி, வேதாரண்யம் பாகம் - 2. திருக்குவளை - ஆதமங்கலம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.