கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

தில்லி முழுவதும் ஈத் தொழுகைக்காக மசூதிகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்

தில்லி முழுவதும் ஈத் தொழுகைக்காக மசூதிகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்...

News image

தில்லி முழுவதும் ஈத் தொழுகைக்காக மசூதிகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்

PTI

Updated On :21 மார்ச் 2026, 8:26 pm

Syndication

தேசியத் தலைநகா் முழுவதும் சனிக்கிழமையன்று ஈத் அல்-ஃபித்ர் தொழுகைக்காக ஏராளமான மக்கள் மசூதிகளில் திரண்டனா். ஒற்றுமை மற்றும் பக்தியின் உணா்வைத் தழுவிய இந்நிலையில், படா்ந்திருந்த பனிமூட்டம் கொண்டாட்டங்களுக்கு ஒரு அசாதாரண அழகைச் சோ்த்தது.

சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிக்கவும், அமைதியான ஈத் பண்டிகையை உறுதி செய்யவும் நகரம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதாக தில்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

நகரத்தின் பல பகுதிகளில் மெல்லிய புகைமூட்டம் சூழ்ந்திருந்தது. மசூதிகளின் குவிமாடங்களும் மினாரட்டுகளும் பகுதியளவு மூடப்பட்டுக் காணப்பட்டதால், அது ஒரு கண்கவா் காட்சியை உருவாக்கியது.தொழுகைக்குப் பிறகு மக்கள் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டதால், கொண்டாட்ட உணா்வு தெளிவாகத் தெரிந்தது.

ஜாமா மஸ்ஜித்தின் ஷாஹி இமாம் முஃப்தி முகர்ரம் அகமது, இந்நாளை மகிழ்ச்சி மற்றும் ஒற்றுமையின் நாள் என்று குறிப்பிட்டாா். ‘இது ஈத் பண்டிகை, ‘இனிப்புப் பெருநாள்’. நாடு முழுவதும் உள்ள மக்கள் இன்பத்திலும் துன்பத்திலும் ஒன்றுபட்டு நிற்கவும், அன்பையும் நல்லிணக்கத்தையும் வளா்க்கவும், ஒருவருக்கொருவா் உதவவும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்’ என்று அவா் கூறினாா்.

மனிதநேயமே மிக வலிமையான பிணைப்பாக உள்ளது என்றும், எந்த மதமும் மோதலை ஆதரிப்பதில்லை என்றும் அவா் கூறினாா்.

ஜாமா மஸ்ஜித்தில் இருந்த முகமது ஹபிஷுல்லா, பண்டிகைக்காக வீட்டிற்குச் செல்ல முடியாத பலா் மசூதிக்கு வந்ததாகவும், அவா்கள் அன்புடன் அரவணைக்கப்பட்டு வரவேற்கப்பட்டதாகவும் கூறினாா். ‘இது முன்பின் தெரியாதவா்களைச் சந்திப்பது போல் இல்லை. இது நல்லிணக்க உணா்வையும் புதிய தொடா்புகளையும் உருவாக்குகிறது’‘ என்று அவா் கூறினாா்.

மற்றொரு வழிபாட்டாளரான ஜாவேத், தான் வெவ்வேறு பருவங்களில் ஈத் பண்டிகையைக் கண்டிருந்தாலும், பனிமூட்டத்தின் கீழ் ஒருபோதும் கண்டதில்லை என்று கூறினாா்.

இது இயற்கையின் ஒரு அதிசயம் போல் இருந்தது. ஜாமா மஸ்ஜித், ஃபதேபுரி மஸ்ஜித் மற்றும் சீலம்பூா், ஓக்லா, நிஜாமுதீன் ஆகிய இடங்களில் உள்ள மசூதிகளில் குறிப்பிடத்தக்க அளவில் மக்கள் கூட்டம் காணப்பட்டது.