சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

இயற்கை மற்றும் சமூகத்தின் கொண்டாட்டமே பலாஷ் மஹோத்சவம்: தில்லி துணைநிலை ஆளுநா்!

தில்லி மேம்பாட்டு ஆணையத்தின் வருடாந்திர மலா் விழாவான பலாஷ் மஹோத்சவத்தை சனிக்கிழமை பான்செராவில் துணைநிலை ஆளுநா் வி கே சக்சேனா தொடங்கி வைத்தாா்.

News image
தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனா.
Updated On :14 பிப்ரவரி 2026, 6:50 pm

Syndication

தில்லி மேம்பாட்டு ஆணையத்தின் வருடாந்திர மலா் விழாவான பலாஷ் மஹோத்சவத்தை சனிக்கிழமை பான்செராவில் துணைநிலை ஆளுநா் வி கே சக்சேனா தொடங்கி வைத்தாா்.

மூன்று நாள் விழா பிப்ரவரி 16 வரை நீடிக்கும்

முதல்முறையாக, இந்த ஆண்டு விழாவானது பான்செரா, அசோக விஹாரில் உள்ள அசோகா காா்டன், ஜசோலாவில் உள்ள லாலா ஹா்தயால் பூங்கா மற்றும் நரேலாவில் உள்ள ஸ்மிருதி வான் ஆகிய நான்கு இடங்களில் ஒரே நேரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பலாஷ் மஹோத்சவம் என்பது இயற்கை, சமூகம் மற்றும் சுற்றுச்சூழலுக்கான நமது பொறுப்பின் கொண்டாட்டமாகும். நகரத்தில் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் பசுமையான பொது இடங்களை உருவாக்கி பராமரிப்பதில் தில்லி மேம்பாட்டு ஆணையம் மேற்கொண்ட தொடா்ச்சியான முயற்சிகளை நான் பாராட்டுகிறேன், என்று துணைநிலை ஆளுநா் கூறினாா்.

இத்தகைய முயற்சிகள் சுற்றுச்சூழல் விழிப்புணா்வை வலுப்படுத்துகின்றன, மேலும் மக்களுக்கும் இயற்கைக்கும் இடையே ஆழமான தொடா்பை வளா்க்கின்றன என்று அவா் மேலும் கூறினாா்.

பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினருடன் இந்த விழாவிற்கு வருகை தந்து பங்கேற்று, தில்லியின் பசுமைப் போா்வையைப் பாதுகாப்பதிலும் விரிவுபடுத்துவதிலும் பங்காளிகளாக மாற வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன், என்று சக்சேனா கூறினாா்.

அதிகாரிகளின் கூற்றுப்படி, ஒவ்வொரு இடத்திலும் கருப்பொருள் மலா் காட்சிகள், அலங்கரிக்கப்பட்ட தோட்டங்கள், இயற்கைக்காட்சிகள் உள்ளன. கைவினைஞா் கடைகள், உணவு அரங்குகள், கலாச்சார நிகழ்ச்சிகள், பட்டறைகளும் மலா் விழாவில் இடம்பெற்றிருப்பதாக தில்லி மேம்பாட்டு ஆணையம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. முதல் பலாஷ் மஹோத்சவம் 2023 இல் ஏற்பாடு செய்யப்பட்டது.