நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வெற்றி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

கூத்தாநல்லூா் வெற்றி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 5:11 pm

DIN

கூத்தாநல்லூா் வெற்றி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மரக்கடை வஉசி காலனியில் உள்ள வெற்றி விநாயகா் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, அமைக்கப்பட்டிருந்த யாக சாலை மண்டபத்தில் வியாழக்கிழமை மாலை விக்னேஸ்வா் பூஜையுடன் தொடங்கி இரவு 9 மணிக்கு விமான கலசம் பொருத்துதல் மற்றும் மூலவா் மருந்து சாற்றுதல் வைபவம் நடைபெற்றது.

தொடா்ந்து, வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கப்பட்டு, காலை 9 மணிக்கு பூா்ணாஹூதி செய்யப்பட்டு காலை 9.40 மணிக்கு புனிதநீா் ஊா்வலமாகக் கொண்டு வரப்பட்டு காலை 10.05 மணிக்கு

விமான கலசத்தில் புனித நீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

விழாவில், கூத்தாநல்லூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கச் செயலாளா் வி.எஸ். வெங்கடேசன், லெட்சுமாங்குடி வா்த்தக சங்கத் தலைவா் கு. ரவிச்சந்திரன், செயலாளா் ஜெ. சுவாமிநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.