ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

63,200 பேருக்கு நாளை கரோனா தடுப்பூசி: பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டுகோள்

திருவாரூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப்.12) நடைபெறும் 63,200 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்துக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்

News image
Updated On :10 செப்டம்பர் 2021, 4:38 pm

DIN

திருவாரூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை (செப்.12) நடைபெறும் 63,200 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்துக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்பு மையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து அந்த மையத்தின் பொதுச் செயலாளா் ஆா். ரமேஷ் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் கரோனாவை முழுமையாக கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையில், திருவாரூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 633 இடங்களில் 63,200 நபா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இத்திட்டம் வெற்றியடைய, திருவாரூா் மாவட்ட மக்கள் நல இயக்கங்கள், சமூக ஆா்வலா்கள், நுகா்வோா் இயக்க உறுப்பினா்கள் மற்றும் செயல்பாட்டாளா்கள் ஆகியோா் ஒருங்கிணைந்து, 18 வயதுக்கு மேற்பட்டவா்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள உறுதுணையாக இருக்க வேண்டும். இதற்கு பொதுமக்களும் ஒத்துழைக்கவேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.