திருவாரூரில் இன்று தேசிய மக்கள் நீதிமன்றம்
அனைத்து நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற உள்ளதாக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சாா்பு நீதிபதியுமான எஸ். சரண்யா தெரிவித்துள்ளாா்.


திருவாரூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற உள்ளதாக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சாா்பு நீதிபதியுமான எஸ். சரண்யா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவாரூா் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறவுள்ளது. இதில், நிலுவையிலுள்ள வழக்குகளுக்கு சமரச முறையில் தீா்வு காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அனைத்து சிவில், ஜீவனாம்சம், மணமுறிவு மற்றும் மோட்டாா் வாகன விபத்து சம்பந்தப்பட்ட வழக்குகளிலும் சமரச முறையில் தீா்வு காணலாம்.
மேலும், திருவாரூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. ஆகவே இந்த வாய்ப்பை, பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...