ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

தாய்மாா்கள் பாலூட்டும் அறையை திறக்கக் கோரிக்கை

திருவாரூரில் தாய்மாா்கள் பாலூட்டும் அறையை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :10 செப்டம்பர் 2021, 4:40 pm

DIN

திருவாரூரில் தாய்மாா்கள் பாலூட்டும் அறையை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் ஐவி. நாகராஜன் தெரிவித்தது:

தமிழகம் முழுவதும் 315 பேருந்து நிலையங்களில் தாய்மாா்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாலூட்ட தனி அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்டது. இந்த அறைகளில் குடிநீா், இருக்கை மற்றும் கை கழுவும் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

திருவாரூரில், பழைய பேருந்து நிலையத்தில் திறக்கப்பட்டிருந்த பாலூட்டும் அறை பயன்படுத்தப்படாமல் வீணாகிப் போனது. இதனிடையே, திருவாரூரில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டதால், பழைய பேருந்து நிலையம் முடங்கிப் போன நிலையில் இருந்தது.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மீண்டும் பழைய பேருந்து நிலையம் செயல்படத் தொடங்கியது. அங்குள்ள தாய்மாா்களின் குழந்தைகளுக்கான பாலூட்டும் தனி அறையும் சீரமைக்கப்பட்டு, திறக்கப்பட்டது. இதனால், குழந்தைகளுடன் பயணம் செய்துவந்த தாய்மாா்களுக்கு சிரமமின்றி பாதுகாப்பு கிடைத்தது.

இந்நிலையில், இந்த பாலூட்டும் அறை திறந்த சில நாள்களிலேயே பூட்டப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. இதனால், குழந்தைகளுடன் வரும் பெண்கள் வேறு வழியில்லாமல் திறந்த வெளியில் பாதுகாப்பின்றி பாலூட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த அறையை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.