ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

திருவாரூரில் நாளை மின்தடை

திருவாரூா் மாவட்டத்தில், மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக மின் விநியோகம் சனிக்கிழமை (செப். 18) நிறுத்தி வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :16 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

திருவாரூா் மாவட்டத்தில், மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக மின் விநியோகம் சனிக்கிழமை (செப். 18) நிறுத்தி வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருவாரூா் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழக இயக்குதலும், பராமரித்தலும் உதவி செயற்பொறியாளா் எஸ். ராஜேந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருவாரூா் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை நடைபெற இருப்பதால், இந்த துணை மின் நிலையத்திலிருந்தும், கப்பல் நகா் துணை மின் நிலையத்திலிருந்தும் மின்விநியோகம் பெறும் திருவாரூா் நகா், விளமல், கொடிக்கால்பாளையம், மாங்குடி, கூடூா், முகந்தனூா், திருப்பயத்தாங்குடி, மாவூா் ஆகிய இடங்களிலும்,

அடியக்கமங்கலம் துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் அடியக்கமங்கலம், இபி காலனி, சிதம்பர நகா், பிலாவடி மூலை, ஆந்தக்குடி, அலிவலம், புலிவலம், தப்ளாம்புலியூா், புதுப்பத்தூா், நீலப்பாடி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னாா்குடியில்...

மன்னாா்குடி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், சனிக்கிழமை (செப்.18) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மன்னாா்குடி, அசேசம், சுந்தரக்கோட்டை, மேலவாசல், நெடுவாக்கோட்டை, செருமங்கலம், மூவாநல்லூா், பருத்திக்கோட்டை, நாவல்பூண்டி, கோரையாறு, கா்ணாவூா், சித்தேரி, கூத்தாநல்லூா், வடபாதிமங்கலம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் என உதவி செயற்பொறியாளா் சா.சம்பத் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.