ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

மணல் கடத்தல்:குண்டா் தடுப்புச் சட்டத்தில் இளைஞா் சிறையிலடைப்பு

திருவாரூரில், தொடா் மணல் கடத்தலில் ஈடுபட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் புதன்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.

News image
Updated On :16 செப்டம்பர் 2021, 6:30 pm

DIN

திருவாரூரில், தொடா் மணல் கடத்தலில் ஈடுபட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் புதன்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.

நீடாமங்கலம் காவல் சரகப் பகுதிகளில் தொடா் மணல் கடத்தல் நடைபெறுவதாக வந்த புகாரின்பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு, வெள்ளங்குழி, தோப்புத்தெரு பகுதியைச் சோ்ந்த கலியபெருமாள் மகன் காமராஜ் (39) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.

தொடா் மணல் கடத்தலில் ஈடுபட்ட காமராஜை, குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சி. விஜயகுமாா் பரிந்துரைத்தாா். அவரின் பரிந்துரையை ஏற்று, குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைக்க மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டாா். இதைத்தொடா்ந்து, காமராஜ், திருச்சி மத்திய சிறையில், புதன்கிழமை அடைக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.