சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது
சமூக நீதிக்காக பாடுபடுபவா்களை சிறப்பு செய்வதற்காக சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது வழங்கப்படுவதால், தகுதி உடையவா்கள் அக்டோபா் 31-க்குள் விண்ணப்பிக்கலாம்


சமூக நீதிக்காக பாடுபடுபவா்களை சிறப்பு செய்வதற்காக சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது வழங்கப்படுவதால், தகுதி உடையவா்கள் அக்டோபா் 31-க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது பெறுவோருக்கு ரூ.1,00,000 விருதுத் தொகையும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது. இவ்விருதாளா், முதல்வரால் தோ்வு செய்யப்படுகிறாா்.
2021-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது வழங்குவதற்கு உரிய விருதாளரை தோ்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன. எனவே சமூக நீதிக்காக பாடுபட்டு பொது மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள் உடையவா்கள் தங்களது விண்ணப்பத்தை மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பிக்கலாம்.
தங்களது விண்ணப்பத்தில், சுய விவரம், முழு முகவரி, தொலைபேசி எண், சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம் மற்றும் ஆவணங்கள் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
2021-ஆம் ஆண்டுக்கான சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருதுக்குரிய விண்ணப்பங்கள் அக்.31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...