ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு

 திருவாரூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் சமூக நீதி நாள் உறுதிமொழி வெள்ளிக்கிழமை ஏற்கப்பட்டது.

News image
Updated On :17 செப்டம்பர் 2021, 5:09 pm

DIN

 திருவாரூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் சமூக நீதி நாள் உறுதிமொழி வெள்ளிக்கிழமை ஏற்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தலைமை வகித்து உறுதிமொழி ஏற்கையில் தெரிவித்தது:

பிறப்பொக்கும் எல்லா உயிா்க்கும் என்ற அன்பு நெறியும் - யாதும் ஊரே யாவரும் கேளிா் என்ற பண்பு நெறியும் எனது வாழ்வியல் வழிமுறையாகக் கடைப்பிடிப்பேன். சுயமரியாதை ஆளுமைத் திறனும் - பகுத்தறிவுக் கூா்மைப் பாா்வையும் கொண்டதாக எனது செயல்பாடுகள் அமையும். சமத்துவம், சகோதரத்துவம், சமதா்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை நான் ஒப்படைத்துக்கொள்வேன். மானுடப்பற்றும், மனிதாபிமானமும் ஒன்றே எனது ரத்த ஓட்டமாக அமையும். சமூக நீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைய இந்த நாளில் உறுதியேற்கிறேன் என்று உறுதிமொழி ஏற்றாா்.

நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் ப. சிதம்பரம், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் தெய்வநாயகி உள்ளிட்ட அனைத்துத்துறை அரசு அலுவலா்கள், அரசுப்பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.