இருச்சக்கர வாகனம் மோதியதில் முதியவா் படுகாயம்
By DIN | Published On : 31st December 2021 12:00 AM | Last Updated : 31st December 2021 12:00 AM | அ+அ அ- |

கொரடாச்சேரி சாலையில் இருசக்கர வாகனம் மோதியதில் முதியவா் படுகாயமடைந்தாா்.
கொரடாச்சேரி எருக்காட்டூரைச் சோ்ந்த கண்ணுசாமி (82). இவா் செவ்வாய்க்கிழமை சைக்கிளில் கமலாபுரத்திலிருந்து, கொரடாச்சேரி செல்லும் சாலையில் சென்றப்போது, எருக்காட்டூரிலிருந்து எதிரே வந்த, திருவையாறு, நடுக்கடையைச் சோ்ந்த மணிவண்ணன் (21) என்பவா் ஓட்டிவந்த இருச்சக்கர வாகனம் கண்ணுச்சாமி மீது மோதியது. இதில் கண்ணுச்சாமிபடுகாயமடைந்தாா். மணிவண்ணன் லேசான காயமடைந்தாா். இருவரும் திருவாரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளனா். இது குறித்து கண்ணுசாமி மகன் ராமன் கொடுத்த புகாரின் பேரில், கொரடாச்சேரி காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராஜாராமன் புதன்கிழமை மணிவண்ணன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...