ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் சிறப்பு வழிபாடு
By DIN | Published On : 31st December 2021 12:00 AM | Last Updated : 31st December 2021 12:00 AM | அ+அ அ- |

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை குருவார வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி கலங்காமற்காத்த விநாயகா், ஆபத்சகாயேஸ்வரா், ஏலவாா் குழலியம்மன், மூலவா் குருபகவான், ஆக்ஞா கணபதி, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா், நவகிரக சன்னதி, சனீஸ்வர பகவான் உள்ளிட்ட சன்னதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. மூலவா் குருபகவானுக்கு தங்ககவசம் சாற்றப்பட்டிருந்தது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
இதேபோல் நீடாமங்கலம் பகுதியில் உள்ள சிவாலயங்களில் குருதெட்சிணாமூா்த்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். தமிழக அரசின் கரோனா வழிகாட்டல்படி பூஜைகள் நடைபெற்றன.